Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-17.05.2022
கவி இலக்கம்-175
தீயில் எரியும் தீவு
————————
ஈழத் தீவின் நிலைமை மோசமானது
அரசு ஆட்சி நிலை கவிழ்ந்தது
போராட்டங்கள் பூசல்கள் வெடித்தது
ஆட்சியாளர் உடமைகள் தீயில் எரிந்தது
ஆடியிலே நடந்தது திரும்ப நடக்குது
முள்ளிவாய்க்கால் கொடூரங்கள் அர்த்தமாகுது
செய்த கொடுமைகள் திரும்ப கொடுக்குது
எம்மக்களின் கண்கள் தூங்காது
ஒளிபெறும் வரை நெருப்பும் அணையாது
செந்தமிழர் கண்ணீர் துளிகள் கனவானது
அன்று மாவீரர்கள் கல்லறை அழிந்து தகரந்தது
இன்று ஆட்சிக்காரரின் தூபி உடைத்து வீழ்ந்தது
அதர்மத்தின் அகங்காரம் தலைதாக்கி ஆடியது
தர்மத்தின் குழந்தைகள் நம்பிக்கை பிறந்தது
புனித தேசம் புதிதாய் பூக்கும் காத்திருப்போம்

Nada Mohan
Author: Nada Mohan